மூன்று முகம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி திருக்கோவில்

மகா மேரு ஸ்ரீ சக்கரம் விளக்கம்


சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுத சாமி திருக்கோவிலின் வளாகத்தில் , இதன் எல்லைக்கு உட்பட்ட இடத்தில்- கைலை நாதர் சன்னதியின் பின் புறம் -சித்தர்கள் சபை அமைக்க பட்டு உள்ளது. மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர். மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

ஸ்ரீ சக்கரம் மந்திரங்கள்

  • ( ஸ்ரீ சக்கரம் வழிபாடும் முறை கோப்பினை பதிவிறக்க )
  • ...இங்கே சொடுக்கவும்...

    ஸ்ரீ சக்கரம் வழிபடும் முறை

    உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கரபூஜையினுள் நுழைகிறார். ஶ்ரீசக்கரபூஜையில் பாத்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கலசபாத்திரம், சாமான்யார்க்கிய பாத்திரம், குரு பாத்திரம், சுத்தி பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், அலி பாத்திரம், பலி பாத்திரம், ஆத்மபாத்திரம், இவ்வாறாக அப்பாத்திரங்கள் பல்திறத்தன.. அவை பூஜையின் ஒவ்வொரு நிலைகளில் சாதகனால் பாவிக்கப்பெறுகிறது. உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர். சதுஷ்ஷஷ்டி உபசாரங்கள் என்ற அறுபத்து நான்கு உபசாரங்களை அன்னைக்கு வழங்கிப் பூஜித்து, அம்பாளைச் சுற்றி எட்டெட்டு வரிசையில் சேரும் ஆவரண சக்திகளை பூஜிப்பர். இது பரிவாரார்ச்சனை என்று குறிப்பிடப்பெறும். நிறைவாக, நவாவர்ணபூஜையும், லலிதா சஹஸ்ரநாம அல்லது திரிசதி நாம அர்ச்சனையும், நைவேத்தியத்துடன் விசேட பூஜையும் செய்வர். அதன் பின் பலிதானம், சுவாஸினீ பூஜை என்பவற்றினையும் ஆற்றுவர்.

    நமது ஸ்ரீ மூன்று முக முத்து வேலாயுத ஸ்வாமி , திரு கோவிலிலும் , ஒவ்வொரு பௌர்ணமி அன்று , மகா மேரு ஸ்ரீ சக்கர நாயகி - மற்றும் , பதினெண் சித்த பெருமான்களுக்கும் வெகு சிறப்பான பூஜை நடைபெற்று வருகின்றது . இந்த மகா பூஜையில் கலந்து கொண்டு , இறைவன் அருள் பெற பக்தர்களை அன்புடன் அழைக்கின்றோம் .

    மகா மேரு மற்றும் சித்தர்கள் பிரபஞ்ச சபை படங்களை காண ...இங்கே சொடுக்கவும்..

 

All Rights Reserved. © Copyright 2017 - ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி திருக்கோவில்