சுமார் 50 (1969) ஆண்டுகளுக்கு முன், சிவகிரி எனும் சிறிய குன்றின் மேல் அமைந்து இருக்கும் மூன்று முக ஸ்ரீ முத்து வேலாயுதஸ்வாமி பெருமானை , அனு தினமும் வழிபட்டு , சிறப்பாக பூஜைகள் செய்து வந்தவர் சின்னப்பர் ஐயா அவர்கள். அடியாரின் முயற்ச்சியினால், பக்தர்கள் உதவியினால், முருக பெருமானுக்கு வேல் ஒன்றினை நிறுவ விழைந்தனர். வேல் சுத்த இரும்பினால் , கைகளினால் செய்ய வேண்டிய கட்டாயம் ஆனது. ஏன் என்றால் , அன்றைய கால கட்டத்தில் பற்ற வைப்பு (வெல்டிங் ) தொழில் முறை நமது பகுதில் செய்ய வசதிகள் இல்லை. ஆகவே , இன்று வீற்று இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் எதிரே சாலையின் மறுபுறம் தென் திசையில் இருந்த ஆனந்தன் ஆசாரி இரும்பு பட்டறையில் அவரின் குமாரர்கள் உதவியுடன் சக்தி வேல் உருப்பெற்றது.
திரு. ரத்தினம் ஆசாரி ( ஆனந்தன் ஆசாரி ) அவர்களின் குமாரர், தனது 15 வது வயதில் சமட்டியினால் சக்தி வேலை பதம் செய்விக்க வேலை செய்த நிகழ்வினை நெகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார். சக்தி வேல் உருவானதும் தடப்பள்ளி வாய்க்கால் தீர்த்த கரையில் இருந்து , அப்போது சுமார் 16 அடி நீளம் உள்ள வேலினை, ஒரே அடியார் தனது தோளிலேயே சுமந்து வந்து திரு கோவிலில் பிரதிஷ்டை செய்தனர் . சக்தி வேலின் ஒரு புறம் ஓம் என்ற ப்ரணவமும் , மறு புறம் சரவணா பவா என்ற மந்திரத்தின் சுருக்கமும் பொறிக்கபட்டன. இவை யாவும் அன்றைய காலத்தில் வெறும் கைகளால் தயாரிக்க பட்டது. தமிழ் நாட்டில் , ஆதிச்சநல்லூரில் கிடைக்க பெற்றது வேல். ஆக, பழந்தமிழரின் வழிபாடு வேல் தான். இந்த மரபு, குறிஞ்சி நில மக்களின் வழக்கமாக இருந்து பின்பு, முருக வழிபாட்டில் ஒரு மிக முக்கிய இடத்தினை, பிடித்தது. இவ்வளவு சிறப்பு மிக்க வேல் அன்றில் இருந்து இன்று வரை வெகு சிரத்தையுடன் பூஜிக்கபட்டு வருகின்றது. இன்றளவும் இந்த சக்தி வேல் வேண்டுவோருக்கு வேண்டுதல் வழங்கி கொண்டு இருக்கின்றது. சக்தி வேல் முருகனுக்கு அரோகரா.
All Rights Reserved. © Copyright 2017 - sraaja@yahoo.com